விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்று வந்த இவருக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் அனிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மூதாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ள ஆள் தேவைப்படுவதாக கூறி, செல்போன் நம்பர் ஒன்றை அனிதா கொடுத்துள்ளார். இதனால், ரேணுகா அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த எண்ணில் பேசிய நபர் ஒருவர், மேலூருக்கு வருமாறும், பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரேணுகாவும், நேற்று முன்தினம் இரவு மேலூருக்கு சென்றுள்ளார். இவரை அழைத்து செல்வதற்காக 20 வயது வாலிபர் ஒருவர் அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். பின்பு, ரேணுகாவை அழைத்துக்கொண்டு தாமரைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ரேணுகா, இங்கு ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த வாலிபர் எந்த பதிலையும் சொல்லாமல், அந்த பெண்ணை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த 4 பேரும் ரேணுகாவை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ரேணுகா மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலையரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை பலாத்காரம் செய்த நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் தீவிரமாக தேடியுள்ளனர். இந்நிலையில் ரேணுகா அளித்த புகாரின் அடிப்படையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த், வினித் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read: தாயுடன் கள்ளத்தொடர்பு.. தட்டிக்கேட்ட மகன்கள்.. இறுதியில் நடந்த அதிர்சி சம்பவம்..



