“இவன் இருந்தா அவன் பொண்டாட்டியை அனுபவிக்க முடியாது”..!! பள்ளி ஆசிரியர் போட்ட பலே பிளான்..!! கூலிப்படைக்கு ரூ.40,000..!!

Sex 2025 5

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சத்யதேவ் விஸ்வகர்மா (50). இவர் தனது பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த அட்டூழியங்களுக்கு அந்தப் பெண்ணின் கணவர் இடையூறாக இருந்ததோடு, மனைவி அடிக்கடி கணவரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த காரணங்களால், ஆசிரியருக்கும் அப்பெண்ணின் கணவருக்கும் இடையே பலமுறை கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன.


இந்த விவகாரத்தில், தன்னுடைய பாலியல் தொல்லைகளுக்கு தடையாக இருந்த அந்தப் பெண்ணின் கணவரை நிரந்தரமாக தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ஆசிரியர் விஸ்வகர்மா, அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக, விஸ்வகர்மா 3 கூலி ரவுடிகளைத் தொடர்பு கொண்டு, அந்தப் பெண்ணின் கணவரைக் கொலை செய்ய அவர்களுக்கு ரூ.40,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்தச் சதித் திட்டம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு ஆசிரியர் சத்யதேவ் விஸ்வகர்மா மற்றும் கூலிக்கு அமர்த்தப்பட்ட 3 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ராஜ்வன்ஷ் பர்ஹியா (52), ராஜு சா (35), மற்றும் மந்து குமார் பர்ஹியா (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Read More : இது லிஸ்ட்லயே இல்லையே..!! தவெகவில் இணையும் 2 திமுக அமைச்சர்கள்..!! பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

CHELLA

Next Post

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6 ஆண்டுகளில் 6% லிருந்து 3.2% ஆகக் குறைந்துள்ளது: அரசு தகவல்!

Tue Dec 2 , 2025
இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]
un employment

You May Like