ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…! 6 மாவட்டங்களில் இன்று கனமழை…!

heavy rain

தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்​ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக் குறைந்தது.

தென்னிந்திய பகுதி மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 6 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மிதமான மழைபெய்யக்கூடும். இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டிசம்பர் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம்...! அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு...!

Thu Dec 4 , 2025
பயிர் பாதிப்பை கணக்கெடுத்து டிசம்பர் இறுதிக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மழை காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேத நிலைகளுக்கு ஏற்ப உரிய […]
Mk Stalin Farmers 2025

You May Like