இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன.
அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.



