3-வது முறையாக ஆளுநரை சந்தித்தார் விஜய்…! ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா..?

vijay governor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது..


இதனிடையே விஜய் தமிழக ஆளுநரை இரண்டு முறை சந்தித்து உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம் என்று உரிமை கோராமல், கூட்டணி ஆட்சி என்று விஜய் உரிமை கோரியதால் பெரும்பான்மையை காட்டினால் தான் ஆட்சியமைக்க முடியும் என்று ஆளுநர் கூறிவிடார்.. அதாவது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க முடியும் என்று ஆளுநர் கூறிவிட்டார்..

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார்.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஏற்கனவே 2 முறை ஆளுநரை சந்தித்த நிலையில் தற்போது 3-வது முறையாக ஆளுநரை சந்தித்து பேசினார்.. சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கினார்..

எனினும் விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 பேர் தேவை.. விசிகவும் தவெகவுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறப்படும் நிலையில், விஜய் தற்போது ஆளுநரை சந்தித்துள்ளார்.. இந்த சூழலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் விஜய்க்கு ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

RUPA

Next Post

Big Breaking : நாளை முதல்வராகிறார் விஜய்..! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. ஐயுஎம்எல் ஆதரவு..!

Fri May 8 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக […]
vijay 9

You May Like