திருப்பரங்குன்றம் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு..

parliament mps 1 1 1

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்..


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது..

இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. அதை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் துணையோடு மனுதாரர் 10 பேரை அழைத்துக் கொண்டு மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்..

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைவில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.. ஆனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது..

நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்றை தினமே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மலை மீது ஏற முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து கோயிலை நொக்கி பாஜகவினர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

மலையேற அனுமதி கோரிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்..

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. திருப்பரங்குன்றத்தில் மத மோதல்களை உருவாக்க முயல்வதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.. கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேசலாம் என்று சபாநாயகர் கூறிய நிலையில், அதனை ஏற்காத திமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.. நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று தமிழில் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்..

அதே போல் மாநிலங்களவையிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.. ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..

இதனிடையே திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.. உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்..

Read More : 3 நாட்களில் 1,000+ இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடர் இடையூறுகளால் பயணிகள் தவிப்பு..!

RUPA

Next Post

“இனி வீட்டிலிருந்தபடி 10 நிமிடங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்”..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!

Fri Dec 5 , 2025
தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பதிவு செய்யக் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், நடைமுறைகளை எளிதாக்கவும் பத்திரப்பதிவுத் துறை புதிய டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்டத் திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு […]
Tn Government registration 2025

You May Like