ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ-யிடம் டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என தெரிவித்துவிட்டது.
தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து அன்புமணி அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் நகல் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிபிஐ இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை அன்புமணி போலி ஆவணங்கள் மூலம் பாமகவை அபகரிக்க முயல்வதாக டெல்லி போலீசில் ராமதாஸ் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே அன்புமணி மீது உள்ள ஊழல் புகாரையும் சேர்ந்து இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.



