fbpx

குளிர்ந்த நீரில் குளிப்பதால் மாரடைப்பு வரலாம்!… மருத்துவர்கள் எச்சரிக்கை!

குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே பலருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகிவிடும். இதற்கு காரணம் என்னவென்றால் அதிகப்படியான குளிர் காரணமாக ரத்த நாளங்கள், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை வரவழைக்கின்றன.

ஆனால் இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் குளிர்காலத்தில் பலரும் காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உங்களுடைய தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது அல்லது ரத்தம் உறைந்துவிடுவதால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு வயது, குடும்ப வரலாறு, வாழ்க்கைமுறை என பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வெளிப்புற காரணிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் ஒன்றுதான் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது.

ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதால் பாதிப்பு அதிகரிக்கும். குளிர்ந்த நீர் உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கி உடலில் ரத்தஓட்டத்தை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் வேகமாக துடிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூளை பக்கவாதம் பலரது இறப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குளிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இங்கே பார்க்கலாம்.

குளிர்ந்த நீரில் குளிக்காதீர்கள்: எப்போதும் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரில் குளிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடலை சூடாக வைத்திருங்கள்: குளிர்கலத்தில் அடிக்கடி உங்களுக்கு உடல்நிலை மோசமாகும் என்றால், தேவையான ஆடைகளை கொண்டு உங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் இயக்கம் அவசியம்: தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைபயிற்சி, யோகா, நடனம், தியானம் என எது வேண்டுமானாலும் செய்வது உங்கள் விருப்பம். ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்றுங்கள்: குளிர்காலத்தில் கிடைக்கக் கூடிய பழங்கள், காய்கறிகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட, வறுத்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். தினசரி டயட்டில் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றை அவ்வப்போது கவனமாக பரிசோதிப்பது அவசியமாகும். உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தால், கடுமையான வேலைகள் எதையும் செய்யாதீர்கள். மதுபானம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள். இல்லையென்றால் இந்த மோசமான பழக்கம் உங்கள் இதயத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.

Kokila

Next Post

Tn Govt: மீண்டும் மஞ்சப்பை... ரூ.10 லட்சம் வழங்கப்படும்...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Wed Jan 3 , 2024
பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் […]

You May Like