கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் வேலை.. 14,967 காலிப்பணியிடங்கள்..! எப்படி விண்ணப்பிப்பது..?

job 1 1

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா சங்கம் (KVS) மற்றும் நவோதயா வித்யாலயா சமிதி (NVS) பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்த பள்ளிகளில் மொத்தம் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலில் டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்:

உதவி ஆணையர் – 17
தலைமை ஆசிரியர் – 227
உதவி தலைமை ஆசிரியர் – 58
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) – 2,996
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) – 6,215
நூலகர் – 147
தொடக்கக்கல்வி ஆசிரியர் (PRT) – 3,365

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:

நிர்வாக அதிகாரி – 12,
நிதி அதிகாரி – 5,
உதவி பொறியாளர் – 2,
உதவி பிரிவு அதிகாரி – 74,
ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர் – 8,
சீனியர் செயலக உதவியாளர் – 280,
ஜூனியர் செயலக உதவியாளர் – 714,
ஸ்டெனோகிராபர் Grade-I – 3,
ஸ்டெனோகிராபர் Grade-II – 57,
ஜூனியர் செயலக உதவியாளர் (HQ / RO Cadre) – 46,
ஜூனியர் செயலக உதவியாளர் (JNV Cadre) – 552,
லேப் உதவியாளர் – 165,
பல்நோக்கு ஊழியர் – 24.

கல்வித்தகுதி:

* உதவி ஆணையர் பதவிக்கு, அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தலைமை ஆசிரியராக குறைந்தது 3 ஆண்டு பணிபரிசோதனை அனுபவம் அவசியம்.

* தலைமை ஆசிரியர் (Principal) பதவிக்கு, முதுகலை பட்டம், B.Ed தகுதியுடன், தலைமை ஆசிரியர் அல்லது துணை தலைமை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. இல்லையெனில், மொத்தம் 12 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் இருந்தால் போதுமானது.

* உதவி தலைமை ஆசிரியர் (Vice Principal) பதவிக்கு, முதுகலை பட்டம் மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். கூடுதலாக, ஆசிரியராக குறைந்தது 6 ஆண்டு அனுபவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பதவிக்கு, அந்தந்த பாடங்களில் முதுகலை பட்டத்துடன் B.Ed முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் கற்பிக்கும் திறன், ஆசிரியர் அனுபவமும் தேவை. எனினும், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி பதவிகளுக்கு இந்த விதிகளில் சில மாற்றங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) பணியிடங்களுக்கு, அந்தந்த பாடங்களில் இளங்கலை பட்டத்துடன் B.Ed தகுதி அவசியம். முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், CTET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு கல்வியாளர்களுக்கும் (Special Educators) விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* நூலகர் பதவிக்கு, நூலக அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு (Library Science) மற்றும் அதற்கான பணி அனுபவம் தேவை.

* தொடக்கக்கல்வி ஆசிரியர் (PRT) பதவிக்கு, 12-ம் வகுப்பிற்கு பின்னர் டிப்ளமோ (D.El.Ed) அல்லது B.El.Ed முடித்திருக்க வேண்டும். மேலும், CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு கல்வி படித்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

* ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதில், பல்நோக்கு உதவியாளர் (Multi-Tasking Staff) பதவிக்கு மட்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

* உதவி ஆணையர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

* உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பதவிக்கு ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

* பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

* தொடக்கக்கல்வி ஆசிரியர் (PRT) பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

* நூலகர் பதவிக்கும் ரூ.44,900 முதல் ரூ.1,42,100 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், நிர்வாக அதிகாரி பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை,

* நிதி அதிகாரி மற்றும் உதவி பொறியாளர் பதவிகளுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை,

* உதவி பிரிவு அதிகாரி மற்றும் ஜூனியர் மொழிப்பெயர்பாளர் பதவிகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

* சீனியர் செயலக உதவியாளர் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை,

* ஜூனியர் செயலக உதவியாளர் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

* ஸ்டெனோகிராபர் Grade-I பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை,

* ஸ்டெனோகிராபர் Grade-II பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை,

* லேப் உதவியாளர் மற்றும் பல்நோக்கு ஊழியர் பதவிகளுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://kvsangathan.nic.in/en/interview-notice/ அல்லது https://www.cbse.gov.in/ அல்லது https://navodaya.gov.in/ ஆகிய ஏதேனும் ஒரு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2025.

Read more: Google-லில் இவற்றை தேடினால் ஜெயிலுக்கு தான் போகனும்.. தெரியாம செய்தாலும் சிக்கல் தான்..!

English Summary

Jobs in Kendriya Vidyalaya, Navodaya Schools.. 14,967 vacancies..! How to apply..?

Next Post

இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்? அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Mon Dec 8 , 2025
கடந்த ஒருவாரமாக இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் பரபரப்பான தலைப்பு செய்தியாக மாறி உள்ளது.. ஊழியர் பற்றாக்குறை, செயல்பாட்டு தடங்கல் காரணமாக ஒரு வாரத்தில் சுமார் 4500 விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் 4,500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தொடர்ந்து ஏழாவது […]
indigo n

You May Like