fbpx

அடுத்தடுத்து நிகழும் பூகம்பங்கள்!… ஆப்கானிஸ்தானில் அரை மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்!… அச்சத்தில் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

2024ம் ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு இடங்களில் பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஜப்பானில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்தநிலநடுக்கத்தால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானை தொடர்ந்து வட மற்றும் தென்கொரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.ஆங்காங்கே வீடுகள் இடிந்து பெரும் சேதமும் ஏற்பட்டது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் (புதன்கிழமை) அதிகாலையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் 80 கிமீ ஆழத்தில், ஃபைசபாத்தில் இருந்து 126 கிமீ தொலைவில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாவது நிலநடுக்கம், ஃபைசாபாத்தில் 100 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாகவும், மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றும் நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

குட் நியூஸ்...! இதற்கான மதிப்பீட்டுக் கட்டணம் முற்றிலுமாக ரத்து...! மத்திய அரசு அறிவிப்பு...!

Wed Jan 3 , 2024
எளிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ் திட்டத்தின் கீழ் மேலும் 37 தயாரிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை தனது செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவான தொலைத்தொடர்பு பொறியியல் மையம் 01 ஜனவரி 2024 முதல் எளிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ் திட்டத்தின் கீழ் மேலும் 37 தயாரிப்புகளைக் கொண்டு வந்துள்ளது . இது சான்றிதழ் பெறுவதற்கான காலத்தை எட்டு வாரங்களிலிருந்து இரண்டு வாரங்களாகக் குறைக்கும். மேலும் வணிகத்தை […]

You May Like