மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

School Money 2025

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநரகம் சார்பில், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி அளவில் விண்ணப்பங்களை சரிபார்க்க வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம்...! என்ன காரணம்...?

Wed Dec 10 , 2025
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]
rn ravi 2025

You May Like