சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசினார்.. அப்போது 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.. இப்போது நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று அமலாக்கத்துறை காவல்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. முதன்முதலாக ஒருவர் போகப்போகிறார்.. இன்னும் 100 நாட்கள் தான் உள்ளது.. இந்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்திற்கு செல்வார்கள்..
இந்தியாவில் ஊழலில் திளைக்கின்ற ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்.. எப்போது பார்த்தாலும் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் இன்று திமுக் அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது.. பொன்முடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது, செந்தில் பாலாஜி வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குகள் உள்ளது.. துரைமுருகன் மீது மணல் ஊழல் வழக்கு, கே.என்.நேரு டெண்டர் ஊழல், அனிதா ராதாகிருஷ்ணன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, தங்கம் தென்னரசு சொத்துக்குவிப்பு வழக்கு, ஐ. பெரியசாமி, வீட்டு வசதித்துறையில் ஊழல், கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, ரகுபதி சிறைத்துறை ஊழல், சக்ரபாணி பொங்கல் தொகுப்பில் ஊழல், இப்படி பல பேர் ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்..
எங்களை பார்த்தா ஊழலை பற்றி பேசுகிறார்கள்.. இவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்.. திமுக என்றால் ஊழல்.. ஊழல் என்றால் திமுக.. அது தான் நிலை.. எப்போது திமுக வந்தாலும் ஊழல் தொடரும்..” என்று தெரிவித்தார்..
Read More : ”2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்..” பொதுக்குழுவில் இபிஎஸ் உறுதி..!



