fbpx

பொங்கல் பரிசாக ரூ.1000/- இந்த வருடம் கிடைக்குமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த தகவல்.?

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொங்கல் ரொக்க பரிசு எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து வருகிறது.

பொங்கல் பரிசு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். இன்று வட சென்னை பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் போது பொங்கல் பரிசு குறித்த தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதில் பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்குவது தொடர்பான முடிவை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சிகள் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதால் அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுக்க டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் சந்தித்து பேசி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் .

Next Post

"இந்த உருட்டெல்லாம் இங்க செல்லாது, கேட்கிற நிதிய கொடுங்கையா."! - பிரதமர் மோடிக்கு கே.எஸ் அழகிரி பதிலடி.!

Wed Jan 3 , 2024
பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடியின் வாய்ஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்திருக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் ஒழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

You May Like