SLEEP Advances என்ற மதிப்பாய்வு செய்யப்பட்ட விஞ்ஞான இதழில் வெளியான புதிய ஆய்வு, தினமும் 7 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களின் ஆயுள் குறையலாம் என்று கண்டறிந்துள்ளது.. 2019 முதல் 2025 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அமெரிக்காவின் 3,000-க்கும் மேற்பட்ட கவுண்டிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, மக்களின் தூக்க நேரத்தை அவர்களின் சராசரி ஆயுளுடன் ஒப்பிட்டு பார்த்தது. குறைவான நேரம் தூங்கும் பகுதிகளில், மக்களின் ஆயுள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
பணக்கார பகுதிகளோ அல்லது வறுமையான பகுதிகளோ, பெருநகரங்களோ அல்லது கிராமப்புறங்களோ என எந்த இடமாக இருந்தாலும், தினமும் 7 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்கும் மக்களிடம் ஆயுள் குறைவு காணப்பட்டது. அதாவது நல்ல தூக்கத்தால் ஒரு நாள் புத்துணர்ச்சி மட்டுமே கிடைப்பதில்லை; அது நீண்ட கால ஆரோக்கியத்துக்கும் நேரடி தாக்கம் ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7–9 மணி நேர தூக்கம் ஏன் முக்கியம்?
National Sleep Foundation படி, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். ஆய்வின் மூத்த ஆசிரியரான டாக்டர் ஆண்ட்ரூ மெக்ஹில் பேசிய போது “தூக்க பழக்கமும் மது அருந்தலுக்கும் இடையே இவ்வளவு வலுவான தொடர்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த தொடர்பு ஆயுளையும் அதிகமாக பாதிக்கிறது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தூக்கம் முக்கியம் என்றே நாம் நினைத்தோம், ஆனால் இந்த ஆய்வு அதனை உறுதிப்படுத்துகிறது. முடிந்தவரை மக்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.” என்று தெரிவித்தார்..
உடல் பருமன், நீரிழிவு நோய் விட குறைவான தூக்கம் அதிக ஆபத்து
ஆய்வாளர்கள், குறைவான தூக்கத்தின் தாக்கத்தை புகைபிடித்தல், கொழுப்பு அதிகரிப்பு, நீரிழிவு, உடற்பயிற்சி இல்லாமை, வேலை இழப்பு, மருத்துவ காப்பீடு இல்லாமை போன்ற மரண அபாய காரணிகளுடன் ஒப்பிட்ட போது அதிர்ச்சிகரமான முடிவு கிடைத்தது.
புகைபிடித்தல் மிகப் பெரிய அபாயமாக இருந்தாலும், அடுத்த இடத்தில் “தூக்கக் குறைவு” வந்துள்ளது. அதாவது, தூக்கக் குறைவு, கொழுப்பு அதிகரிப்பை விடவும், நீரிழிவை விடவும், உடற்பயிற்சி இல்லாமையை விடவும் ஆயுளுக்கு அதிக ஆபத்தானது. 7 முதல் 9 மணி நேர தரமான உறக்கம் ஆடம்பரம் அல்ல; அது நீண்ட ஆயுளுக்குத் தேவையான அடிப்படை உடல் தேவை என்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.. இந்த ஆய்வு, தூக்கத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது: போதிய அளவு தூக்கம் கிடைக்காதது, உடல்நலத்தையும் ஆயுளையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது..
Read More : உடலின் இந்த பாகங்களில் வலி இருக்கா? உங்கள் சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளது என்று அர்த்தம்.!



