“விஜய் சரியான தொடை நடுங்கி.. மேடையில் தான் வீர வசனம் எல்லாம்..” பொளந்துகட்டிய மாஜி மேலாளர் P.T செல்வக்குமார்..!

pt Selvakumar tvk vijay 1

தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்தார்.. இவர் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிடி. செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்..


இந்த நிலையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த பி.டி. செல்வக்குமார் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.. அப்போது பேசிய அவர் “ விஜய்க்கு முதலில் துணிச்சலே கிடையாது.. துணிச்சல் இருந்தால் அவர் முதலில் பாஜகவை தான் எதிர்க்க வேண்டும்.. இன்று இருக்கும் விலைவாசி உயர்வு, வரிகள், ஒரே நாடு ஒரே வரி என்றார்கள், ஒரே வரியா வாங்குகிறார்கள்? விஜய் என்றைக்குமே இதை பற்றி பேசமாட்டார்.. காரணம்.. பயம்.. விஜய் மக்களுக்காக எந்த விஷயத்தையும் எதிர்க்கவில்லை..

ஒரு ஆதார் இருந்தால் போதும் என்றவர்கள் இன்று ஆதார் செல்லாது என்கிறார்கள்.. சாமானியர்கள் எப்படி சமாளிக்க முடியும்.. இந்த தேர்தலுக்கு SIR தேவையே கிடையாது என்று விஜய் சொல்ல வேண்டியது தானே.. அவர் ஏன் சொல்லவில்லை என்றால்.. விஜய் மிகவும் பயந்தவர்.. அவர் கூட இருந்ததால் அது நமக்கு தெரியும்..

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதாது.. அவர் மக்களை சாதாரணமாக நினைக்கிறார்.. அப்படி கிடையாது.. மக்கள் அணு அணுவாக யோசிப்பார்கள்.. மக்கள் பிரச்சனைகளை பற்றி விஜய் யோசிப்பதே கிடையாது.. வெறுமனே சவால் விட்டு, முதல்வரை எதிர்த்து பேசினால் மட்டும் அரசியலில் வெல்ல முடியாது..

பட்டம் பறக்கும்.. கண்டிப்பாக ஒரு நாள் அறுந்துவிழும்.. அது போல தான் விஜய்.. விஜய் மக்களுக்காக களமிறங்கவில்லை எனில், கடுமையாக உழைக்கவில்லை எனில் மக்களுக்காக சிந்திக்கவில்லை எனில் யாரும் ஓட்டு போடமாட்டார்கள்.. நீங்கள் ஒரு நடிகர் என்பதால் சிலர் ஓட்டுப்போடலாம்.. பெரிய மாற்றங்கள் வந்துவிடும்.. நம்மை முதல்வராக்கிவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கார்.. அப்படி நினைத்தவர்கள் பலரும் தோற்று தான் போயுள்ளனர்..

எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களோடு பழகினார்.. அண்ணா, கலைஞரோடு பழகியவர்.. பல சோதனைகளை பார்த்தவர்.. எம்.ஜி.ஆர் ஓர் அத்தியாயம்.. அதோடு முடிந்துவிட்டது.. அவரோடு விஜய்யை ஒப்பிடுவதே தவறு.. எம்.ஜி.ஆர் மாதிரி வேறு யாரும் வர முடியாது.. சினிமா வேறு, அரசியல் வேறு.. இங்கு மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும்.. சவால் அரசியல், புகழை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற அரசியல், ரசிகர்களை வைத்து வெற்றி பெறலாம் என்ற அரசியல் எடுபடாது.. அது நாட்டிற்கும் நல்லதல்ல..” என்று தெரிவித்தார்..

Read More : சிவனும், முருகனும் இந்துக் கடவுளா? என்னுடன் விவாதிக்க தயாரா? சீமான் ஆவேசம்.!

RUPA

Next Post

“ என்னை வாழ வைக்கும் தெய்வங்களான..” பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!

Sat Dec 13 , 2025
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 25 வயதை போலவே 75 வயதிலும் ஒரு நடிகர் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி.. அதுமட்டுமா, இந்த […]
rajinikanth 3

You May Like