தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்..! கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

stalin 4

திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்..


இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அன்பகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்..

இந்த நிலையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.. அதில் “ தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!! மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக – தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்! என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.

நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : தொடர்ந்து ட்விஸ்ட் கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

RUPA

Next Post

25 வயதிலேயே முழங்கால் வலியால் அவதிப்படுறீங்களா? இந்த அறிகுறிகள் தென்பட்டால், எச்சரிக்கையா இருங்க..!

Wed Jun 3 , 2026
Due to changes in modern lifestyles, knee pain is becoming a common problem even among young people aged between 25 and 35.
knee pain in young adults

You May Like