சமூக ஊடகங்களில் ஆபாசமாக பதிவு செய்தால் சிறை தண்டனை…! மத்திய அரசு புதிய விதிமுறை…!

OTT youtube 2025

சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.


பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக ஆபாசமான, அருவருப்பான காட்சிகளை ஒளிபரப்பாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கத்தை எதிர்கொள்வதற்கான சட்டக் கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடையீட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்ட தொகுப்பு) விதிகள், 2021 (தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021) ஆகியவை இணைந்து, டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோத மற்றும் கேடு விளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தடை செய்யும் ஒரு கடுமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

இது பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், இடையிட்டுக்கான கடமைகள் குறித்த தெளிவான நெறிமுறைகளை விதிக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், தனியுரிமை மீறல்கள் (பிரிவு 66E), ஆபாசமான அல்லது பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல் (பிரிவுகள் 67, 67A, 67B) போன்ற பல்வேறு இணையவழிக் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வகை செய்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மார்கழி மாத அமாவாசை..!! இந்த 5 பொருட்களை தானம் செய்தாலே போதும்..!! அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்..!!

Thu Dec 18 , 2025
இந்து சாஸ்திரங்களின்படி, மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதனை ‘பித்ருபட்ச’ அமாவாசைக்கு இணையான ஒரு தினமாகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். 2025-ஆம் ஆண்டில், இந்த விசேஷமான மார்கழி அமாவாசை டிசம்பர் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. நம்முடைய முன்னேற்றம் மற்றும் குடும்ப நலனுக்காகப் பாடுபட்டு மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய இது உன்னதமான நாளாகும். இந்த நாளில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், […]
dhanam2

You May Like