இன்று ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய விஜய் எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை எல்லாம் திமுக அரசுக்கு கிடையாது.. 24 மணி நேரமும் விஜய்யை பற்றி தான் அவர்களுக்கு யோசனையே.. விஜய்யை எப்படி எதிர்க்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.. மணல் கொள்ளையை மட்டும் தொடர்ந்து செய்வார்கள்..
நெசவாளர்கள் தங்கள் கூலியை கூட போராட வேண்டிய நிலையில் தான் இந்த அரசு நம்மை வைத்திருக்கிறது.. சிறு குறு தொழில்களில், பீக் ஹவுர்ஸ் கட்டணம் என்று கொள்ளையடிக்கின்றனர்.. இப்படி எதையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை.. ஈரோட்டில் மட்டுமில்ல எந்த மாவட்டத்திற்கு போனாலும் பிரச்சனைகள் தான்.. அதை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு தீர்வு சொல்லாமல், மாடல் அரசு மாடல் அரசு என்று சொல்ல வேண்டியது.. இதை சொல்வதற்கு கூச்சமாக இல்லை..
இதை எல்லாம் கேட்டால், விஜய் என்ன பஞ்ச் டைலாக் மாதிரி பேசுகிறார், விஜய் 10 நிமிடங்கள் பேசுகிறார் என்று விமர்சிக்கின்றனர்.. நான் எப்படி பேசினால் உங்களுக்கு என்ன? மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தரக்குறைவான அரசியல் எனக்கு வராது.. எனக்கு வரும் வேண்டாம்னு விட்டு வைத்திருக்கிறோம்.. நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது.. சலுகைகளை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.. ஓசில போறீங்கன்னு அசிங்கப்படுத்துறீங்க.. என்ன கேட்பதற்கு ஆள் இல்லன்னு நினைச்சீங்களா? மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து நிற்பான்.. இந்த விஜய் கேள்வி கேட்பான்.. விஜய் எப்போதுமே மக்கள் பக்கம் தன.. மக்களும் என் பக்கம் தான்.. மக்கள் கௌரவத்துடன் மரியாதையுடன் வாழ வேண்டும்.. மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும்.. இதற்கான திட்டங்களை அரசு வகுத்து கொடுக்க வேண்டும்.. இதை எல்லாம் செய்தால் அது நல்ல அரசாங்கம்..” என்று தெரிவித்தார்..



