fbpx

4 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…! 3 இடத்தில் பள்ளி மட்டும் லீவ்…!

கன மழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதே போல கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவு முதல் பெய்து வரும் பலத்த மழையின் அளவு 58 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

Vignesh

Next Post

குளிர்காலத்தில் சூடான நீரில் அடிக்கடி குளிப்பவரா நீங்கள்.? இந்த தவறை இனி செய்யாதீங்க.!?

Mon Jan 8 , 2024
குளிர்காலத்தில் தண்ணீர் குளிராக இருப்பதால் பலரும் வெந்நீரில் குளித்து வருகின்றனர். ஆனால் இப்படி குளிப்பது முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சூடான தண்ணீரை தலையில் ஊற்றுவது பல தீமைகளை உடலில் ஏற்படுத்தும். 1. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது சூடான தண்ணீரை தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகி முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 2.  மேலும் இதனால் முடியின் கருப்பு […]

You May Like