காரைக்காலில் எஸ்.பி ஆக பணியாற்றிய உயர் அதிகாரிக்கும், பெண் போலீசுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் போலீஸ் ஏற்கனவே திருமணமானவர். இந்த நிலையில் அந்த உயர் அதிகாரி 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார். ஆனாலும் அவர்களுக்கிடையிலான கள்ளக்காதல் தொடர்ந்தது.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். எப்போது போனும் கையுமாக இருக்கும் பெண் போலீஸ் மீது அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது, ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்ச்சியாக பேசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மெசெஜ்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, காரைக்கால் சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யாவை சந்தித்து, தன்னிடம் இருந்த ஆதாரங்களை காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதை அறிந்த மனைவி அதிர்ச்சி அடைந்தார். கணவருக்கு எல்லாம் தெரியவந்துவிட்டதே என்ற பயமும், அவமான உணர்வும் அவரை மனதளவில் நொறுக்கியது. இதனால் பெண் போலீஸ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.. எனினும் அப்பெண் போலீஸ் உடனடியாக மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மற்றொருபக்கம் கணவர் தந்த புகார் மீது, புதுச்சேரிக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்த அந்த உயர் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



