HIV (Human Immunodeficiency Virus) பாதிப்பு என்பது மனித உடலின் பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) தாக்கி அதை மெதுவாக பலவீனப்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும். சரியான சிகிச்சை இல்லாமல் விட்டால், இது AIDS (Acquired Immunodeficiency Syndrome) என்ற கடுமையான நிலைக்கு மாறும். இந்தியாவில் சுமார் 25.44 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதே போல் தமிழ்நாட்டில் சுமார் 1.3 லட்சம் பேருக்கு HIVஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..
HIV எப்படி உடலுக்குள் நுழைகிறது?
HIV வைரஸ் உடலுக்குள் செல்லும் முக்கிய வழிகள்:
- பாதுகாப்பற்ற பாலியல் உறவு
- பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் செலுத்தப்படுதல்
- ஒரே ஊசியை பலர் பயன்படுத்துதல்
- கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு (கருவில், பிறக்கும் போது, தாய்ப்பால் மூலம்)
- HIV பாதிக்கப்பட்டவரின் இரத்தம் அல்லது விந்து நேரடியாக திறந்த காயத்தில் சேருதல்
HIV பரவாத வழிகள்:
- கை குலுக்குதல்
- கட்டிப்பிடித்தல்
- ஒரே பாத்திரம் / கழிவறை பயன்படுத்துதல்
- கொசு கடித்தல்
- பேசுதல், தும்முதல், இருமல்
HIV பாதிப்பின் அறிகுறிகள்
ஆரம்ப நிலை (2 – 4 வாரங்களில்)
- காய்ச்சல்
- தலைவலி
- உடல் வலி
- தொண்டை வலி
- சோர்வு
- லிம்ப் கட்டிகள் வீக்கம்
இவை சாதாரண காய்ச்சலாக தோன்றுவதால் பலர் கவனிக்காமல் விடுகிறார்கள்.
நீண்டகால நிலை
- அடிக்கடி நோய்கள் ஏற்படுதல்
- எடை குறைதல்
- தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
- தோல் நோய்கள்
- நினைவுத்திறன் குறைதல்
HIV வைரஸ் கட்டுப்படுத்தப்படாமல் பல ஆண்டுகள் இருந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் சிதைவடைகிறது. அந்த நிலைதான் AIDS. இந்த நிலையில் சாதாரண தொற்றுகளே உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.
இந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடப்பாண்டில் பரிசோதனை செய்த 9,931 நபர்களில் 49 பேருக்கு HIV தொற்று இருப்பது தெரியவந்தது.. அவர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் 49 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதியானது.. தொடர் மருத்துவ சிகிச்சை எடுக்கும்படி, சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் எனவும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் 49 பேருக்கும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்..
HIV க்கு சிகிச்சை உள்ளதா?
முழுமையான குணமாகும் மருந்து இன்னும் இல்லை. ஆனால் ART (Antiretroviral Therapy) என்ற மருந்துகள் மூலம்
- வைரஸை கட்டுப்படுத்தலாம்
- சாதாரண வாழ்க்கை நடத்தலாம்
- AIDS ஆக மாறாமல் தடுக்கலாம்
- பிறருக்கு பரவும் அபாயத்தை மிகக் குறைக்கலாம்
HIV பாதிப்பைத் தடுக்கும் வழிகள்
எப்போதும் பாதுகாப்புடன் (Condom) பாலியல் உறவு
ஒரே ஊசியை பலர் பயன்படுத்த வேண்டாம்
ரத்தம் செலுத்தும்போது பரிசோதிக்கப்பட்ட இரத்தம் மட்டுமே
கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் HIV பரிசோதனை
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஊசிகள் போட வேண்டாம்
Read More : அலர்ட்..! மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தோன்றும் 5 அறிகுறிகள் இவை தான்.!



