இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு அவருக்கு..? ரசிகர்கள் கவலை!

Director Bharathiraja

16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் இவர் தனது பயணத்தை துவங்கினார். ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதன்பின், பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே கடந்த 2025 மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இவருடைய மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்மகன் மனோஜ் மறைவுக்குப் பிறகு பாரதிராஜா கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்விலிருந்து வந்தார். அண்மையில் சென்னை திரும்பிய பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் பாரதிராஜா சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Read more: இளம் வயதிலேயே மாரடைப்பு வர இந்த பழக்கங்கள் தான் காரணம்.. நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

English Summary

Director Bharathiraja admitted to hospital.. How is his health..?

Next Post

கூடுதல் தொகுதி கேட்டு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்.. விழி பிதுங்கும் ஸ்டாலின்! என்ன செய்ய போகிறார்..?

Sun Dec 28 , 2025
Alliance parties are demanding additional seats.. Stalin is in a daze! What is he going to do..?
MK Stalin dmk

You May Like