BREAKING | அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!! படகுகளையும் பறிமுதல் செய்து அடாவடி..!!

fisherman arrest

தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்குச் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சூழ்ந்து கொண்டு அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கையின் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் கடந்த சில வாரங்களாகத் தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்தப் பிரச்சனைக்கு இன்னும் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும் இலங்கை கடற்படையின் வாடிக்கையாகிவிட்டது என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் தொடர் கைது நடவடிக்கையால் மீனவ குடும்பங்கள் கடும் வாழ்வாதாரப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய அத்துமீறல்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசு இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.

Read More : ஏகாதசி அன்று ஏன் துளசி பறிக்கக் கூடாது..? விரதம் இருப்பது எப்படி..? இன்று கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள்..!!

CHELLA

Next Post

பான்-ஆதார் இணைப்பிலிருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? வெளிநாடு வாழ் இந்தியர்கள், மூத்த குடிமக்கள், சிறார்கள் கவனத்திற்கு.!

Tue Dec 30 , 2025
இந்தியாவின் வருமான வரி அமைப்பின் கீழ், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிக முக்கியமான இணக்க விதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. போலியான பான் அட்டைகளை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வரி கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக அரசாங்கம் இந்த தேவையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், யார் தங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும், யார் சட்டப்பூர்வமாக இதற்கு விலக்கு பெற்றவர்கள் என்பது குறித்து இன்னும் குழப்பம் […]
pan aadhaar

You May Like