மக்களே உஷார்.. வாட்ஸ்அப்பில் வரும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை க்ளிக் செய்யாதீங்க!! சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..

sir online cyber crime 1

புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப்பில் புதிய வகை சைபர் மோசடி வேகமாகப் பரவி வருகிறது. புத்தாண்டு வாழ்த்துகள் என்ற பெயரில் அனுப்பப்படும் போலி செய்திகளை நம்பி, APK கோப்புகளை பதிவிறக்கம் செய்து நிறுவினால், மொபைல் போன் மற்றும் வங்கிக் கணக்குகள் மோசடி செய்பவர்களின் கட்டுப்பாட்டுக்கு செல்லும் அபாயம் இருப்பதாக சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


இந்த மோசடி செய்திகளில், வாழ்த்து அட்டை, படம் அல்லது வீடியோ பார்ப்பதற்காக இணைக்கப்பட்ட கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் இந்த இணைப்புகள் APK (Android Package Kit) கோப்புகளாக இருக்கும். அவற்றை நிறுவியவுடன், ட்ரோஜன் வகை தீம்பொருள் பின்னணியில் இயங்கி, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை திருடுகிறது.

APK நிறுவப்பட்ட சில மணி நேரங்களில், மொபைலில் அசாதாரண செயல்பாடுகள், பயன்பாடுகள் தானாக திறப்பது, மெசேஜ்கள் மற்றும் தொடர்புகள் மற்றவர்களுக்கு கிடைப்பது, UPI மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து அனுமதியில்லாத பண பரிவர்த்தனைகள் நடைபெறுவது போன்ற புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி செய்திகள் தெரியாத எண்களிலிருந்தோ அல்லது ஹேக் செய்யப்பட்ட நண்பர்களின் கணக்குகளிலிருந்தோ வரக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் வரும் போலி APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பூர்வமான பயன்பாடுகளை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், OTP, PIN, வங்கி விவரங்களை கேட்கும் செய்திகள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

டிஜிட்டல் மோசடிகளைத் தவிர்க்க, தெரியாத கோப்புகளை பதிவிறக்கம் செய்யாமல், இணையத்தில் எப்போதும் விழிப்புடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பு என சைபர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: புது எண்ணில் இருந்து வந்த போன் கால்.. கணவனுக்கு மனைவியின் கள்ளக்காதலன் அனுப்பிய பார்சல்..! ஆடிப்போன சேலம்..

English Summary

Beware of ‘Happy New Year’ APK on WhatsApp

Next Post

8வது சம்பளக் குழு: ஜனவரி 1-க்குப் பிறகு யாருக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கும்..? - முழு விவரம்..

Tue Dec 30 , 2025
8th Pay Commission: Who will get the most salary hike after January 1, 2026 Junior or senior employees?
1732771 8thpaycommissionupdate2 1

You May Like