fbpx

இரவு உணவை, இப்படி சாப்பிடுங்கள்.. உடலில் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.!

அன்றாடம் ஒருவர் இரவு உணவை 07:00 முதல் 07: 30 மணிக்குள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றைய தினம் முழுவதும் சோர்வாக இருக்கும் நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிடும் பட்சத்தில் தூங்குவதற்கு தேவையான அளவிற்கு நேரம் கிடைக்கும். எனவே அதிகாலையில் எழும்போது சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மேலும், மன அழுத்தத்தை போக்குகின்ற மெலடோனின் என்கின்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து, ஆற்றல் அதிகரிக்கும்.

அதிகப்படியானோர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்வார்கள். இதனால் உடலில் வாயு தொந்தரவுகள் அதிகரிக்கும். வயிறு முழுமையாக இருக்கும் போது படுப்பதால் அமில வீச்சு ஏற்பட்டு அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. சீக்கிரமாக சாப்பிட்டால், வாயு தொல்லை, ஆசிடிட்டி உள்ளிட்டவை இருக்காது. சரியாக உணவு செரிமானம் ஆவதால் உடலில் கொழுப்புகள் தேங்காது. இதனால் இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்சனை தான் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பதற்கும் இரவில் தாமதமாக சாப்பிடுவது முக்கிய காரணம்.

இரவில் சாப்பிட்டு விட்டு சற்று தூரம் நடப்பதால் உணவு எளிமையாக ஜீரணம் ஆகும். கொழுப்பு சேராது. எனவே உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.
இரவு தூங்குவதற்கும், இரவு உணவிற்கும் இடையில் இடைவெளி இருப்பது அவசியம். எனவே அன்றாடம் இரவு உணவை 07:00 முதல் 07: 30 மணிக்குள் சாப்பிடுவதால் நம் உடலில் முக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் பல்வேறு நோய்கள் நம்மை தாக்குவதில் இருந்து காக்கப்படும்.

Rupa

Next Post

இரண்டாக பிரியும் கோவை?… தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்?… எந்தெந்த பகுதிகள்?… எந்த மாவட்டம்?

Fri Jan 12 , 2024
தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவெடுத்தன. முன்னதாக, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி […]

You May Like