2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.70 குறைந்து ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.560 குறைந்து ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்துள்ளது..
அதே போல் இன்று காலை மாற்றமின்றி தொடர்ந்த வெள்ளி விலை, பிற்பகலில் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.257-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.2.57 லட்சத்திற்கு விற்பனையாகிறது..
Read More : வெள்ளி விலை ஏன் தாறுமாறாக உயர்கிறது? எதிர்காலத்தில் அதன் விலை எவ்வளவு உயரும்? ஷாக் தகவல்..!



