fbpx

இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.69 சதவீதம்…! மத்திய நிதி அமைச்சகம் தகவல்…!

2023 டிசம்பரில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2012=100 அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் 2023 டிசம்பர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 2023, டிசம்பர் மாதத்தில், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 99.9% கிராமங்கள் மற்றும் 98.6% நகர்ப்புற சந்தைகளிலிருந்து விலைகளை சேகரித்தது.

அதே நேரத்தில் அதில் தெரிவிக்கப்பட்ட சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 90.0% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 93.7% ஆகும்.

Vignesh

Next Post

நிலம் மற்றும் வீடு இலவசமாக வழங்கியும் இந்த தீவில் குடியேற விரும்பாத மக்கள்..! என்ன காரணம்.!?

Sat Jan 13 , 2024
அன்றைய காலகட்டம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தங்களுக்கென தனி வீடு மற்றும் நிலம் வாங்குவது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் பல வசதிகள் நிறைந்த நகரம் போன்ற பகுதிகளிலும், ஒரு சிலர் அமைதியான சூழ்நிலை நிறைந்த கிராமம் போன்ற பகுதிகளிலும் வீடுகளை கட்டுவதற்கு ஆசைப்படுவார்கள். இது போன்ற நிலையில் அமைதியான சுற்றுச்சூழல் இருக்கும் பகுதியில் வீடும், நிலமும் இலவசமாக வழங்கி மக்களை வரவேற்கும் அரசாங்கத்தினை […]

You May Like