மின்சார வாகனம் வாங்க போறீங்களா..? ரூ.10,000 வரை மானியம் வழங்கும் மத்திய அரசு..!! PM E-DRIVE திட்டம் பற்றி தெரியுமா..?

EV 2026

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ‘பிஎம் இ-டிரைவ்’ (PM E-DRIVE) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2024 செப்டம்பரில் முடிவடைந்த ஃபேம்-2 (FAME-II) திட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம், வரும் 2026 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு நேரடி மானியம் வழங்குவதுடன், நாடு முழுவதும் மின் வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


இத்திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள்), மூன்று சக்கர வாகனங்கள், மின்சாரப் பேருந்துகள், சரக்கு லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதி உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஒரு கிலோவாட் ஹவர் (kWh) பேட்டரி திறனுக்கு 5,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை மானியம் பெற முடியும்.

அதேபோல், மின்சார 3 சக்கர வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும், மின்சாரப் பேருந்துகளுக்கு 35 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற விரும்பும் வாகனங்களில் நவீன ‘லித்தியம்-அயன்’ பேட்டரிகள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும்.

வாடிக்கையாளர்கள் இந்த மானியத்தைப் பெறுவதற்கு நீண்ட காத்திருப்புத் தேவையில்லை. இது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை வாங்கும்போதே டீலர் மூலம் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) செய்யப்பட்டு, வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு ஒரு இ-வவுச்சர் (e-Voucher) அனுப்பப்படும். இந்த வவுச்சரை பயன்படுத்தி வாகனத்தின் விலையிலேயே மானியத் தொகையை கழித்துக் கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் ஆரம்ப விலையிலேயே பெரும் தள்ளுபடி பெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனிநபர் ஒரு இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே இச்சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களுக்கு மானியம் அளிப்பது மட்டுமல்லாமல், சார்ஜிங் வசதிகளையும் இத்திட்டம் முன்னெடுத்துள்ளது. சுமார் 48,400 இருசக்கர வாகன சார்ஜர்கள், 22,100 நான்கு சக்கர வாகன சார்ஜர்கள் மற்றும் 1,800 அதிவேக மின் பேருந்து சார்ஜர்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் தளங்கள்..!! 3 ஆண்டுகளில் 50 டிவி சேனல்கள் மூடல்..!! NDTV, ABP-வுக்கும் இந்த நிலைமையா..?

CHELLA

Next Post

ரகசிய டீல் பேசிய அமித்ஷா..!! 50 தொகுதிகளா..? ஷாக்கான ஆன எடப்பாடி..!! கூட்டணியில் சலசலப்பு..!!

Tue Jan 6 , 2026
தமிழக அரசியல் களத்தில் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி உறவு, மீண்டும் ஒருமுறை அனல் பறக்கும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திருச்சி பயணம், இரு கட்சிகளுக்கும் இடையிலான பனிப்போரை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜக தலைமைக்கும் இடையே நிலவும் ஈகோ யுத்தம், தொகுதிப் பங்கீடு வரை நீண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு […]
deccanherald import sites dh files articleimages 2023 03 30 eps shah pti 1205076 1680189796

You May Like