தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் இதுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? அண்ணாமலை கேள்வி..!

vijay annamalai e1789901048739

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்..


மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி தவெக நிர்வாகி பாலமுருகன், ராமநாதபுரம் தவெக நிர்வாகி ஜெயபால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..

பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு விஜய் அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : நீங்க 6 மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் சாகணுமா..? ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.. முதல்வர் விஜய்யை விளாசிய இபிஎஸ்..!

RUPA

Next Post

தினமும் மழை பெய்யும்… நம் நாட்டில் உள்ள இந்த ஊரைப் பற்றி தெரியுமா? உலகின் மிக அதிக மழைப்பொழிவு..!

Tue Jun 2 , 2026
‘மழை’ என்ற சொல் நம் அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது. வானத்திலிருந்து விழும் மழைத்துளிகள், சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நிவாரணம் அளித்து, மனதைக் குளிர்விக்கின்றன. ஆனால், மழை ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் பெய்தால் மட்டுமே நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைய முடியும். மாறாக, வருடத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், இடைவிடாமல் மழை பெய்தால், அந்த கிராமத்து மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? நம் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான மற்றும் […]
highest rainfall in india mawsynram 1

You May Like