fbpx

பெற்றோர்களே, குழந்தைகள் முன்பு அடிக்கடி சண்டையிடுகிறீர்களா.!? அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்.!

பொதுவாக ஆணும் பெண்ணும் கணவன், மனைவி எனும் உறவில் இருக்கும் போது மனஸ்தாபமும், சண்டையும் வந்து சமாதானமாகி பின்பு அது காதலாக மாறிவிடும். ஆனால் குழந்தைகள் வந்துவிட்டால் அவர்கள் முன்பும் அவ்வாறே சண்டை போட்டுக் கொண்டு கோபமாக இருப்பது குழந்தைகளின் மனநிலையை மிகவும் பாதிக்கும் என்று மனநிலை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு குழந்தைகளின் முன்பு சண்டையிடும் போது அவர்களின் மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம்?

பெற்றோர்களின் சண்டை மற்றும் வாக்குவாதத்தை அடிக்கடி பார்க்கும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. இதனால் எதிர்காலத்தில் மிகவும் அமைதியான சுபாவமாக மாறிவிடுகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்களில் பலர் குழந்தை பருவத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் தான் என்று ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் பெற்றோர் சண்டையிட்டு கொள்வதை பார்க்கும் குழந்தைகளுக்கு மனதளவில் மட்டுமல்லாமல் உடல் அளவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதய நோய்கள், ஆஸ்துமா, ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் உடல் அளவில் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியமாக பெற்றோர்கள், குழந்தைகளின் முன்பு சண்டையிட்டுக் கொள்ளும் போது அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாமல் போகும். இதனால் தற்கொலை எண்ணம் ஏற்படவும் செய்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நம் குழந்தைகள் நம்மை பார்த்து தான் முதலில் கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படியிருக்க அவர்களின் முன்பு தகாத வார்த்தைகள் பேசுவது, ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களை செய்யும்போது மனநிலை பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்?… தெரிந்துகொள்ளுங்கள்!

Mon Jan 15 , 2024
தைத்திருநாளாம் பொங்கல் நாளில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வரும் மக்கள், எந்த திசையில் பொங்கல் பொங்கினால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் புத்தரிசியில்… பொங்கல் வைத்து, புதிய ஆடை உடுத்தி பொங்கல் திருவிழாவை வரவேற்க தமிழ் மக்கள் பலரும் தயாராகி விட்டனர். அதே நேரத்தில் நம், முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும். அப்படி பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதையும் […]

You May Like