ஜாய் கிரிசல்டா தொடர்பான வழக்கு.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!

joy crizilda madhampatty rangaraj

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும் மாதம்பட்டி ரங்கராஜு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர் தொடர்ந்து அவருடன் இருந்த வீடியோக்கள் போட்டோக்களையும் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்..

இந்த சூழலில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம் ரங்கராஜ் சென்ன உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்..

இந்த வழக்கு விசாரணையின் போது, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடன் சேர்ந்து வாழ்வதாக ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசல்டா தரப்பு வாதிட்டது.. மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு, ஜாய் கிரிசில்டாவுக்கு டிஎன்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பரிசோதனையில் தாம் தான் தந்தை என்பது தெரியவந்தால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது..

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்து நீதிபதி என். செந்தில்குமார், தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைத்தார்.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Read More : “ திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்..” இபிஎஸ் – அன்புமணி கூட்டாக பேட்டி..!

RUPA

Next Post

பொங்கலுக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும்! பெண்களுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர்..!

Wed Jan 7 , 2026
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் 2025-ல் புதுச்சேரி பட்ஜெட்டில் இந்தத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது.. மேலும் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாகக் […]
Magalir Urimai Thogai 2 2025 07 9eb7752fe559866f5586af0eeb756baa 1

You May Like