1.91 கோடி குடும்பங்கள்.. 50,000 தன்னார்வலர்கள்..! “உங்க கனவ சொல்லுங்க..” புதிய திட்டம் இன்று தொடக்கம்!

Mk Stalin Tn Govt 2025

“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.


நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த் துறை சான்றிதழ்கள். மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள். சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டம். முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம். முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும். திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும். மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும். அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களாக இப்பணிகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொள்ள உரிய பயிற்சி பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து. படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தினை இன்று (9.1.2026) திருவள்ளுர் மாவட்டம். பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தொடங்கி வைக்க உள்ளார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் இன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்வர்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.. பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்..!

RUPA

Next Post

"ஆட்சியில் பங்கு.. தொகுதியில் கெடுபிடி"..!! எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்த அமித்ஷாவின் நிபந்தனைகள்..!!

Fri Jan 9 , 2026
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம், வழக்கத்தை விட முன்கூட்டியே அதிரடி திருப்பங்களுடன் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகின்றன. இந்த மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக, பாமக ஏற்கனவே 18 தொகுதிகள் என்ற உடன்பாட்டுடன் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் […]
eps amitshah

You May Like