ரூ.3.23 கோடி ஊழல்..? எ.வ. வேலு வீட்டில் நடந்த ரெய்டில் குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் சிக்கியது.. லஞ்ச ஒழிப்புத்துறை பரபரப்பு தகவல்..!

ev velu ex minister

கடந்த 202-ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடர்பான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்தின் டெண்டரில் முறைகேடு உள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை முதலே எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணக்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. சோதனையின் போது மதிப்பு மிக்க  ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், நெடுஞ்சாலை துறை தொடர்பான ஆவணங்கள் சிக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை பணி டெண்டர்களை சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எந்த பணியும் மேற்கொள்ளாமலேயே ரூ.3.23 கோடி அரசு பணம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Read More : அமைச்சர் நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. நாங்க எதுவுமே செய்யலயா..? பொங்கி எழுந்த செந்தில் பாலாஜி..!

RUPA

Next Post

PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அனைத்து சேவைகளும் 3 நாட்களுக்கு முடக்கப்படும்..! இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்..!

Fri Jun 26 , 2026
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலருக்கும் பிபிஎஃப் (PPF) கணக்கு இருப்பது வழக்கம். இது அவசர காலங்களில் கைகொடுக்கும் ஒரு பொக்கிஷம் போன்றது. பிஎஃப் (PF) தொடர்பான புதிய தகவல்களையும் மாற்றங்களையும் இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பிஎஃப் தொடர்பான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. தனது இணையதளத்தில் சில முக்கிய சேவைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்போவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காகவே […]
EPFO 11zon

You May Like