ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் (2026) போட்டிக்கான தகுதி பட்டியலில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: சேப்டர் 1’ மற்றும்
அனுபம் கேர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘தன்வி: தி கிரேட்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஆஸ்கருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட படம் ‘Homebound’ என்றாலும், காந்தாரா மற்றும் தன்வி படங்களின் தயாரிப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் (Independent Entry) தங்களது படங்களை ஆஸ்கர் போட்டிக்கு சமர்ப்பித்துள்ளனர்.
201 படங்கள் ‘சிறந்த படங்கள் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன
அமெரிக்க திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி (AMPAS) வெளியிட்ட தகவலின்படி, 201 திரைப்படங்கள் நேரடியாக ‘Best Picture’ (சிறந்த படம்) பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சேர அமெரிக்காவின் முதல் 50 பெரிய நகரங்களில் 45 நாட்களுக்குள் குறைந்தது 10 நகரங்களில் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டும்.. அகாடமி நிர்ணயித்த 4 தரநிலைகளில் குறைந்தது 2 பூர்த்தி செய்திருக்க வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளைப் படங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் காந்தாரா சேப்டர் 1 மற்றும் டன்வி தி க்ரேட் ஆகிய படங்கள் ஆஸ்கர் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.. இந்த ஆண்டு ஆரம்பத்தில், சுபோத் கானோல்கர் இயக்கிய மராத்தி திரைப்படமான
‘Dashavatar’ கூட ஆஸ்கர் தகுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஆஸ்கார் போட்டிப் பட்டியல் என்றால் என்ன?
ஆஸ்கார் போட்டிப் பட்டியல் என்பது ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட தகுதி நிலை ஆகும். இந்த நிலையில், அகாடமி விதிமுறைகளை பூர்த்தி செய்த படங்கள், தேவையான கட்டணங்கள் செலுத்தி அதிகாரப்பூர்வமாகப் படங்களை சமர்ப்பித்து. பின்னர் அகாடமி உறுப்பினர்களால் பரிசீலனை செய்யப்பட்டு நியமனப் பட்டியலுக்கு செல்லும் வாய்ப்பு பெறுகின்றன.
முக்கிய தேதிகள்
நவம்பர் 2025 – Documentary, Animated Feature, International Feature ஆகிய பிரிவுகளுக்கான
தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது (மொத்தம் 317 படங்கள்).
2026 ஜனவரி 22 – இறுதி ஆஸ்கர் நியமனப் பட்டியல் வெளியிடப்படும்.
படங்கள் பற்றிய விவரம்
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘காந்தாரா: சேப்டர் 1’ திரைப்படம், 2025 ஆம் ஆண்டின் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். முதல் ‘காந்தாரா’ படத்தில் நடித்ததற்காக அவர் தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தன்வி தி கிரேட்’ திரைப்படத்தை அனுபம கெர் தயாரித்து, இயக்கி, எழுதியுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, போமன் இரானி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.



