மக்கள் மயக்கமடைந்து விழுந்த போது ஏன் பேச்சை நிறுத்துவில்லை? விஜய்யிடம் 4 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு!

vijay cbi

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.


இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தீவிர விசாரணையை தொடர்ந்து, கட்சியின் தலைமை என்ற அடிப்படையில் விளக்கம் அளிக்க விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக 20 கி.மீ பயணித்த விஜய் இன்று காலை 11.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.. விஜய் உடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்ரனர்.. மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கியது.

டெல்லியில் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள லோதி சாலையில் பேரிகாட் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஊகடகத்தினருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது..

இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் எழுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது.. 7 மணி நேரம் தாமதமாக பரப்புரை நடைபெற்றது ஏன்? அதிகளவில் கூட்டம் கூடியது தொடர்பான தகவல்கள் காவல்துறையிடம் பகிரப்பட்டதா? பெருங்கூட்டத்திற்கு மத்தியில் விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது?  விஜய்யின் பிரச்சார வாகனத்தின் நகர்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? இல்லையா? கூட்ட நெரிசலை சமாளிக்க தவெக சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ எழுப்பியதாக கூறப்படுகிறஹ்டு.

இந்த நிலையில் விஜய்யிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. காலை 11.30 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் 4.15 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.. சிபிஐ அதிகாரிகள் 4 பேர், விஜய்யிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு நடுவே சிறிது நேரம் விஜய்க்கு மதிய உணவு அருந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த விசாரணையில் விஜய்யிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு விஜய் தாமதமாக வந்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.. விஜய்யிடம் இன்று எழுத்துப்பூர்வமாக பதில்கள் பெறபப்ட்டன.. மக்கள் மயக்கமடைந்து விழுந்த போது ஏன் நீங்கள் பேச்சை நிறுத்துவில்லை? என்று சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதே போல் தண்ணீர், பாதுகாப்பு, அவசரகால மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

Read More : சட்டம், ஒழுங்கை காப்பாற்ற தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல முதல்வருக்கு அசிங்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி..!

RUPA

Next Post

ரயில் தாமதமாக வந்தால், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இலவசம்..! இந்த IRCTC விதி பற்றி தெரியுமா?

Mon Jan 12 , 2026
இந்திய ரயில்வேயில் ரயில்கள் தாமதமாவது சாதாரணமாகிவிட்டது. பரபரப்பான ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடும்போது பயணிகள் விரக்தியடைகின்றனர். சில நேரங்களில் தாமதம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மற்ற நேரங்களில் அது பல மணிநேரமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பயணிகளுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் ஐஆர்சிடிசி விதிமுறை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த கொள்கை ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பொருந்தும். ஒரு ரயில் தாமதமாகும் போது […]
irctc 2

You May Like