டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்… முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அதிமுக மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. வைத்திலிங்கம் தாய் கழகம் என நினைத்துக் கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது.. திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவது வேதனையாக உள்ளது.. திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறேன்..
இறுதிமூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பதே எனது ஒரே நிலைப்பாடு.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம்.. தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.. ஓய்ந்துவிடமாட்டேன்..” என்று தெரிவித்துள்ளார்..



