fbpx

இப்படி ஒரு திட்டமா…? தமிழக அரசு வழங்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! முழு விவரம்

படித்து வேலையில்லாத நபர்கள் தமிழக அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம் மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/- பட்டதாரிகளுக்கு ரூ.1,000/-ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 31.03.2024 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு 01.01.2024 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000/-க்கு மிகையாமல் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்),பொறியியல் மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.

மேலும் தற்பொழுது எந்ததுறையின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிறசான்றுகளுடன் 29.02.2024 க்குள் விண்ணப்பத்தினை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திடுமாறும் மேலும் ஏற்கனவே உதவித் தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், 29.02.2024க்குள் சுய உறுதி மொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கோயிலின் 6வது அறையில் மறைந்துள்ள மர்மம்.! அறையை திறந்தால் நாடே சாபத்திற்கு உள்ளாகும்..!

Wed Jan 24 , 2024
கேரளாவில் உள்ள பத்மனாபசாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த மற்றும் உலகளவில் பிரபலமடைந்த கோயில் ஆகும். கோயிலைப் பற்றி வெளிவந்த விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. அனந்த சயன கோலத்தில் காட்சி தரும் பத்மனாபசாமி திருக்கோயிலில் திருவிதாங்கூர் அரசர் தனது முழு சொத்துக்களையும் ஒப்படைத்தார் என்று கூறப்பட்டு வருகிறது. பத்மனாபசாமி திருக்கோயிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டதிலிருந்து மன்னராட்சி முடிவுக்கு வரும் வரை 21 குண்டுகள் முழங்க அரசு ராணுவ மரியாதை […]

You May Like