2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :
* செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* நுண் சிறு, குறு தொழிலை ஊக்குவிக்க மும்முனை திட்டம் உருவாக்கப்படும்.
* சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
* விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.
* பயோ பார்மா சக்தி திட்டம் தொடங்கப்படும். இதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
* மூலதன செலவு ஒதுக்கீடு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்வு.
* நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.
* 2-வது, 3-வது நிலை நகரங்கள் மற்றும் கோயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* சென்னை – பெங்களூரு – ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்.
Read More : BUDGET BREAKING | 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!



