பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஆடிப்பூர திருவிழா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காகவும் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறவும், ஆகஸ்ட் 14 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : BREAKING | வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் ஜெயில்..!! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது மசோதா..!!



