கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐய்யர் மலையிலிருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் உருக்குலைந்து பலத்த சேதமடைந்தன. பேருந்திற்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை காவல்துறையினர், உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ராகுல் காந்தி சொன்ன வாரத்தையால் மக்களவையில் கடும் அமளி; ராஜ்நாத் சிங், அமித்ஷா கடும் ஆட்சேபனை.!



