குட்நியூஸ்..! தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள்.. எந்தெந்த வழித்தடங்களில்? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..!

bullet train final image 1

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.. ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.. தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார்..


தொடர்ந்து பேசிய அவர் “ சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் வழிதடத்தில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும்.. சென்னை – ஹைதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை – பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரயில் இயக்கப்படும்.

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள், புனரமைக்கப்பட்டுள்ளது.. மேலும் 95% ரயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ரூ.35, 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை. பெரும்பாலான ரயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை.. மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சை – மன்னார்குடி ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை. நிலங்களை கையகப்படுத்தி ஒத்துழைப்பு தந்தால் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றி தரப்படும்..” என்று தெரிவித்தார்.

Read More : ராகுல் காந்தி சொன்ன வாரத்தையால் மக்களவையில் கடும் அமளி; ராஜ்நாத் சிங், அமித்ஷா கடும் ஆட்சேபனை.!

RUPA

Next Post

தங்கம் அணிவதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..? பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கும் தீர்வு..? முன்னோர்கள் சொன்ன ரகசியம்..!!

Mon Feb 2 , 2026
தங்கம் என்பது காலங்காலமாக செல்வ செழிப்பின் அடையாளமாகவும், சிறந்த முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், அதனை ஒரு மருத்துவக் காரணியாகவும் கையாண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத உண்மை. நவீன மருத்துவ உலகம் வியக்கும் வகையில், தங்கம் நமது உடல் நலனில் ஏற்படுத்தும் ஆச்சரியமான மாற்றங்கள் குறித்து இங்கே காண்போம். இயற்கையான நச்சு நீக்கி மற்றும் சருமப் பாதுகாப்பு : […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like