Flash: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.. திமுக அமைச்சர்கள் தொகுதிகளில் தவெக முன்னிலை..!

TVk vijay stalin

கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன.


காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்னப்பட்ட நிலையில், 8.30 முதல் இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 57 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவதாக தவெக 41 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மூன்றாவதாக அதிமுக 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து தவெக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். அதே போல் சேப்பாக்கம் தொகுதியில் உதய நிதி ஸ்டாலின் பின்தங்கியுள்ளார். அந்த தொகுதியிலும் தவெக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

சைதாபேட் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா. சுப்பிரமணியனும் பின்னடைவை சந்தித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பின்தங்கியுள்ளார். திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் தவெக முன்னிலை வகிக்கிறது. சென்னையை பொருத்தவரை பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று வருகிறது.

Read more: TN Election Results 2026: திருச்சி கிழக்கில் விஜய்க்கு பின்னடைவு..! – முதல் சுற்று நிலவரம்..

English Summary

Flash: MK Stalin’s setback in Kolathur.. Thaveka candidates are ahead in the constituencies where DMK ministers are contesting..!

Next Post

தமிழ்நாட்டில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை..! அமைச்சர்கள் பின்னடைவு..! முன்னிலையில் தவெக வேட்பாளர்கள்..!

Mon May 4 , 2026
தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் […]
Stalin vs Vijay 2026

You May Like