பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான H. ராஜா (68) கடந்த 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.. அங்கிருந்தவர்கள் ஹெச். ராஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அவசர சிகிச்சை அளித்தனர்.. தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹெச். ராஜா பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குடும்பத்தினர் நண்பர்களுடன் அவர் உரையாடும் அளவுக்கு நலமுடன் இருக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது..
ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து பாஜக தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஹெச். ராஜா உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்..
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹெச்,. ராஜா உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார்.. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் H. ராஜாவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். அவர் விரைவில் நலம்பெற விரும்புவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
Read More : நகைக்கடன் தள்ளுபடி.. தமிழ்நாடு அரசின் ரகசிய அறிவிப்பு..!! அதிகாரிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு..!!



