புற்றுநோயை தடுக்கும் ரகசியம்..!! மலை பூண்டு ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா..? வெள்ளை பூண்டு நல்லதா..?

garlic 11zon

சமையலறையில் அஞ்சறைப் பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்கும் பூண்டு, வெறும் சுவைக்கான பொருள் மட்டுமல்ல; அது ஒரு நடமாடும் மருத்துவமனை. பூண்டுப் பிரியர்கள் மத்தியில் அடிக்கடி எழும் ஒரு கேள்வி “சாதாரண வெள்ளை பூண்டு சிறந்ததா அல்லது மலை பூண்டு சிறந்ததா?” என்பதுதான். இந்த இரண்டு வகைகளிலும் ஒளிந்துள்ள அபூர்வ மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.


மலை பூண்டு :

இமயமலை தொடரின் உயரமான பகுதிகளில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளையக்கூடிய இந்த மலை பூண்டு, மருத்துவ உலகில் ‘காஷ்மீரி கார்லிக்’ அல்லது ‘ஜம்மு கார்லிக்’ என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு ஒற்றை இதழ் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள ‘ஆர்கனோ சல்பர்’ (Organo-sulfur) எனும் வேதிப்பொருள், உடலில் வளரும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பேராற்றல் கொண்டது. இது புற்றுநோய் பாதிப்பை 50 சதவீதம் வரை குறைப்பதாகத் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் இது அசாத்தியமானது. காலையில் வெறும் வயிற்றில் இதனைச் சாப்பிடும்போது, ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இதய அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும், இதிலுள்ள ‘அலிசின்’ (Allicin) கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பைச் சீராக்குகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க இதில் உள்ள ‘ஆலினேஸ்’ மற்றும் ‘ஆலின்’ ஆகிய வேதிப்பொருட்கள் கவசமாகச் செயல்படுகின்றன.

வெள்ளை பூண்டு :

நமது சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் வெள்ளை பூண்டு, பெனிசிலின் போன்ற ஆன்டிபயாடிக்குகளை விடச் சக்தி வாய்ந்தது என மருத்துவர்கள் கருதுகின்றனர். இதில் உள்ள செலினியம் மற்றும் அலிசின் சத்துக்கள் கல்லீரலில் சுரக்கும் என்சைம்களைச் சீராக்கி, உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. வாரத்தில் இரண்டு முறை பாலில் வேகவைத்த பூண்டை சாப்பிடுவது கல்லீரலுக்குப் பெரும் பலம் சேர்க்கும்.

உடலில் காய்ச்சல் 102 டிகிரியைத் தாண்டினால், பூண்டுச் சாற்றை உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் தேய்ப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் என்ற பாரம்பரிய மருத்துவ முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்ட இந்த வெள்ளை பூண்டு, ஏறத்தாழ 22 வகையான நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது.

எது சிறந்தது..? எப்படிப் பயன்படுத்தலாம்..?

மலை பூண்டு மற்றும் வெள்ளை பூண்டு ஆகிய இரண்டுமே தமக்கே உரிய தனித்துவமான மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன. மலை பூண்டு சற்றே காரம் அதிகமாகவும், வீரியம் மிக்கதாகவும் இருக்கும். நிபுணர்களின் கருத்துப்படி, இரண்டுமே உடலுக்கு அவசியமானவை. எனவே, வாரத்தில் 3 நாட்கள் மலை பூண்டையும், மற்ற 3 நாட்கள் சாதாரண வெள்ளை பூண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது முழுமையான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். எது கிடைத்தாலும் சரி, தினமும் குறைந்தது இரண்டு பல் பூண்டை உணவில் சேர்ப்பது நோயற்ற வாழ்விற்கு உத்தரவாதம் தரும்.

Read More : “அதுக்கு தான் நான் இருக்கேன்.. அவன் கூட ஏன் போன”..? காட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்..!! மடியில் கிடந்த மனைவியின் உடல்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

CHELLA

Next Post

மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு இல்ல.. இந்த ஹீரோ தான்.. வெங்கட் பிரபு சொன்ன தகவல்..!

Tue Feb 3 , 2026
நடிகர் சிலம்பரசன் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும் தற்போதும் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். அந்த வகையில் நடிகர் சிம்புவின் சமீபத்திய வெற்றிப் படங்களில் ஒன்று ‘மாநாடு’ (2021). வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் […]
simbu maanadu 1

You May Like