முதலில் ஆதவ்.. இப்ப விஜய்.. தலைமை செயலகமா..? இல்ல தவெக அலுவலகமா..? கொந்தளித்த வானதி சீனிவாசன்..!

cm vijay vanathi

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தலைமைச் செயலகத்தை தவெக அலுவலகமாக மாற்றியதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்..


சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமை செயலத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர்.. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.. மேலும் தவெக குதிரை பேரம் மற்றும் கட்சி தாவல் அரசியலை தமிழ்நாட்டில் தவெகவும் செய்கிறது என்றும் அதற்காக தலைமை செயலகத்தையே அதிகாரப்பூர்வ மையமாக மாற்றி உள்ளனர் என்று காட்டமாக விமர்சித்தனர்..

தற்போது அதே பாணியில் தான் முதல்வர் விஜய்யை இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்திற்கு தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி ஒதுக்கப்பட்டடு.. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்..

இந்த நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Breaking : தமிழ்நாட்டில் காலியாகும் ராஜ்ய சபா சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு.. தவெக தலைமை அறிவிப்பு..

English Summary

BJP Women’s Wing President Vanathi Srinivasan has stated that holding alliance-related talks at the Tamil Nadu Government Secretariat is highly condemnable.

RUPA

Next Post

எபோலா மட்டுமல்ல.. நம்மை சூழ்ந்துள்ள 8 ஆபத்தான உயிர்க்கொல்லி நோய்கள்..! இவற்றுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை..!

Thu Jun 4 , 2026
In addition to Ebola, let us look at eight other deadly diseases that could become major threats in the future, but for which no vaccines currently exist.
virus 1 1

You May Like