இப்படி கூட உடல் எடையை குறைக்கலாமா..? தினமும் பயன்படுத்தும் இனிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!!

Weight Loss 2025

இந்தியாவில் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்பு தற்போது முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வெள்ளை சர்க்கரையின் உற்பத்தி மற்றும் பயன்பாடு சுமார் 13% உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் விரும்புவோர், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் ‘டேட் சுகர்’ (பேரீச்சம்பழ சர்க்கரை) மற்றும் ‘ஸ்டீவியா’ (இனிப்புத் துளசி) ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.


பேரீச்சம்பழ சர்க்கரை (Date Sugar) : இது பேரீச்சம்பழத்தை நன்றாக காய வைத்துப் பொடியாக்கி தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. ஆனால், இதில் இயற்கையாகவே இனிப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பெரிய அளவில் உதவாது. மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஸ்டீவியா (Stevia) : இது ‘ஸ்டீவியா ரெபாடியானா’ என்ற செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பு. இதில் ‘சைபர்’ (Zero) கலோரிகள் உள்ளன. அதாவது, இதில் சத்துக்கள் ஏதும் இல்லை என்றாலும், உடலுக்கு தீமை தரும் கலோரிகளும் இல்லை. சாதாரண சர்க்கரையை விட இது பல மடங்கு அதிக இனிப்பு தன்மை கொண்டது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் எடையை குறைக்க துடிப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.

உடல் எடையை கட்டுப்படுத்தவும், ரத்தச் சர்க்கரையை சீராக வைக்கவும் நினைப்பவர்களுக்கு ‘ஸ்டீவியா’ தான் சிறந்த தேர்வு. பேரீச்சம்பழ சர்க்கரை சத்துக்கள் நிறைந்தது என்றாலும், அது ஒரு மாற்று இனிப்பாக மட்டுமே செயல்படும்; ஆனால், மருந்தாகாது. எனவே, உங்கள் சர்க்கரை நோயின் தீவிரம் மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து, ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரியான இனிப்பை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.

Read More : அமாவாசை, பௌர்ணமியில் முன்னோர்களுடன் பேசும் ரகசிய மலை..!! தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிவன் கோயிலா..?

CHELLA

Next Post

தேர்தல் களத்தில் எடப்பாடியின் அடுத்த மூவ்..!! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி..!! அதிர்ச்சியில் திமுக..!!

Wed Feb 4 , 2026
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன. அந்த வகையில், தற்போதைய கள சூழலில் அதிமுக தனது செல்வாக்கை வலுப்படுத்தும் […]
Edappadi Palanisamy EPS 2026

You May Like