“மீண்டும் எடப்பாடியார் ஆட்சி”..!! அதிமுகவுடன் கைகோர்த்த பிரபல கட்சி..!! குஷியில் இபிஎஸ்..!!

Edappadi Palanisamy EPS 2026

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது.


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் சூழலில், பார்வர்டு பிளாக் கட்சியின் இந்த ஆதரவு அவருக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி. கதிரவன், “மக்களின் நாடித்துடிப்பை அறிந்து எடப்பாடியார் ஒரு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குறுதிகள் தமிழகத்தின் ஒவ்வொரு சாமானிய மனிதனையும் சென்றடையும் வகையில் உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை நிச்சயமாக அவரை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும்” என்று தெரிவித்தார். அதிமுகவின் வாக்குறுதிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

Read More : இளைஞர்களே.. காளான் வளர்ப்பில் ஆர்வமா..? ரூ.12 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

CHELLA

Next Post

கசந்துபோன காதல் திருமணம்..!! வடமாநில வாலிபர் மீது உல்லாச ஆசை..!! சேலையை வைத்தே கணவனின் கதையை முடித்த மனைவி..!!

Thu Feb 5 , 2026
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியே சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), அம்சவள்ளி (28) ஆகிய இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இணைந்த இந்த தம்பதியினர், கடந்த 9 ஆண்டுகளாக ஓசூர் தேர்பேட்டை […]
Crime 2026 5

You May Like