தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.. மேலும் “ இன்று மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு, ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்வதற்கு பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.. இதற்கு முன்பு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்தது.. இப்போது மதுரையில் வரும் 1-ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட பொதுகூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்..” என்று தெரிவித்தார்..
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் கண்டிப்பாக வரும்.. யார் யார் வர உள்ளனர் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்..” என்று கூறினார்..
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் “ கல்வி நிறைந்த தமிழ்நாடு என்பது போய், கஞ்சா நிறைந்த தமிழ்நாடு என்று நிலைமை மாறிவிட்டது.. திமுக அரசு திறமையற்ற அரசாக இருக்கிறது..” என்று தெரிவித்தார்..
மேலும் விஜய் தொடர்ந்த வழக்கு குறித்து பேசிய அவர் “ விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்தது சரி தான் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.. இப்போது விசில் அடிப்போம்.. ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லி வரும் விஜய்க்கு எதிராக இப்போது விசில் அடிக்க தொடங்கி உள்ளோம்..” என்று தெரிவித்தார்..



