தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளை கொண்டுள்ள அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது.
மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதையொட்டி, அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன், இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறத் தங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன், “எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு எவ்வித நிபந்தனையுமின்றி எங்களது ஆதரவை வழங்குகிறோம்” என தெரிவித்தார்.
Read More : Flash : காலையில் குறைவு.. மாலையில் உயர்வு.. ஆட்டம் காட்டும் தங்கம் விலை..! நிலவரம் இதோ..!



