2008இல் வெளிவந்த ‘செக்ஸ் அண்ட் த சிட்டி’, நான்கு தோழிகளின் நியூயார்க் நகர வாழ்க்கையை பறைசாற்றி, தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, சாரா ஜெசிக்கா பார்க்கர் அவர்கள் ‘கேரி பிராட்சா’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அவர் அதில் அணிந்திருந்த, புகழ்பெற்ற குட்டை பாவாடையை அந்தப் படத்தின் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
‘செக்ஸ் அண்ட் த சிட்டி’ திரைப்படமும், அதில் வந்த கதாபாத்திரங்கள் அணிந்த உடைகளும் மக்களை மிகவும் கவர்ந்தன. வெறும் $5க்கு (சுமார் ரூ.415), நியூயார்க் நகரின் ஆடை மாவட்டத்தில் இருந்து ஆடை வடிவமைப்பாளர் பாட்ரிசியா ஃபீல்ட் வாங்கிய குட்டை பாவாடையை, தற்போது ஜூலியனில் நடந்த ஏலத்தில் $52Kக்கு (சுமார் ரூ.43,22,370) விற்பனை செய்துள்ளனர்.
2008இல் வெளிவந்த திரைப்படத்தில் சாரா ஜெசிக்கா பார்க்கர், தனது அலமாரியை சுத்தம் செய்யும் காட்சியில் அந்த குட்டை பாவாடை மீண்டும் இடம் பெற்றுள்ளது. டூடூ ஸ்கர்ட் என அழைக்கப்படும் இந்த பாவாடை $8,000 முதல் $12,000 வரை விலை போனதாக மதிப்பிடப்பட்டது.
ஹாலிவுட்டின் முன்னாள் பிரபலங்களிலிருந்து, இந்நாள் பிரபலங்கள் வரை பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்ட வகையில், இந்தப் புகழ்பெற்ற குட்டை பாவாடை அதிக லாபத்தை ஈட்டியதாக கருதப்படுகிறது.